• Apr 16 2026

"டாக்ஸிக்" படத்தின் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு.! நடந்தது என்ன.? ஷாக்கில் ரசிகர்கள்

shali / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் தற்பொழுது அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் டாக்சிக், இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய மிகப்பெரும் புராஜெக்ட் ஆகும். நடிகர் யாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இப்படத்தில் பல பிரபல ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘டாக்சிக்’ படத்தில் நடிகர் யாஷ் கதையின் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், திரைப்படத்தில் மேலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பல பிரபல நடிகைகள் நடித்துள்ளார்கள். இதில், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.


முதலில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப திட்டப்படி, படத்தை மே 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. 

இந்நிலையில் தற்பொழுது வெளியான அறிவிப்பின் படி, தற்போது டாக்சிக் படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தள்ளிப்போக்குக்கு காரணம், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் அரசியல் பதற்றம் எனத் தெரிவித்துள்ளனர். புதிய வெளியீட்டு தேதி ஜூன் 4-ந்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement