• May 28 2026

2 வருடம் வேலை இல்லாம இருந்தாலும் பரவாயில்லை… ஜோதிகா எடுத்த முடிவால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் தொடர்ந்து வலுவான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவர், தனது அடுத்த கட்ட சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


அவர் கூறியதாவது, “அரசுப் பள்ளி ஆசிரியை முதல் வழக்கறிஞர் வரை பல்வேறு பெண் மைய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். குடும்பத் தலைவியாகவும், சமூகத்தில் பல நிலைகளை பிரதிபலிக்கும் வகையிலும் பல கதைகளில் நடித்த அனுபவம் கிடைத்துள்ளது. 

இப்போது அதைவிட புதுமையான, யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அதற்காக இரண்டு ஆண்டுகள் கூட காத்திருக்கத் தயார்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கதையின் தரத்திற்கும், கதாபாத்திரத்தின் வலிமைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்ற பாராட்டுகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. 

வணிக ரீதியான படங்களைக் காட்டிலும், சவாலான மற்றும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement