• Apr 19 2026

'எல்லாம் கொஞ்ச காலம் தான்..' பப்லுவை பிரிந்த ஷீத்தல் திடீரென ரசிகர்களுக்கு அட்வைஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ்  24 வயது பெண்ணான ஷீத்தல் என்பவருடன்  லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது.

இதை தொடர்ந்து, இருவரும் இணைந்து வீடியோ போடுவது, புகைப்படங்களை பகிர்வது என தமது வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்திச் சென்றனர்.

சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனாலும், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள் என உருட்டி இருந்தார்.


ஆனாலும், இதுவரையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்ததாகவோ, அவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்றோ எந்த தகவலும் வெளியாகவில்லை.

எனினும், பப்லுவை பிரிந்த போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷீத்தல் ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்களையும், தனது தனிப்பட்ட விடீயோக்களை மட்டுமே தற்போது பகிர்ந்து வருகிறார். 


இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷீத்தல். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

அதன்படி அதில், 'Keep Smiling' என கேப்சன் போட்டு எதுவுமே நிரந்தரம் இல்லை, இன்று பிரச்சனை, துன்பம் வந்தால், நாளை, நாளை மறுநாள், இல்லை அடுத்த மாதம் என்றாலும் மாறிவிடும்  என கூறியுள்ளார் ஷீத்தல்.



Advertisement

Advertisement