ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படத்திற்கு கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனாலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனில் மாபெரும் சாதனை படைத்து வருகின்றது. இதனால் கூலி படத்தின் படக்குழுவினர் பெரும் கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்கள்.
கூலி திரைப்படம் வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது . ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் இந்த திரைப்படத்தின் வசூல் உச்சம் தொட்டது. தமிழ் சினிமாவிலேயே முதல் நாளில் 151 கோடி வசூலித்த கூலி, நான்கு நாள் முடிவில் 404 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருந்தது.
இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் வழமை போல கூலி திரைப்படத்திற்கும் தனது நெகட்டிவ் கருத்தினை முன் வைத்துள்ளார். தற்போது அவருடைய பதிவுகள் ரஜினிகாந்த் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
அதன்படி அவர் கூறுகையில், கழுகு குஞ்சுகள் எனக் குறிப்பிட்டு மாஸ்டரை விழ்த்திய ஜெய்லர், லியோ கலெக்ஷனை தாண்டிய கூலி...
உங்க தலைவரை இந்திய சூப்பர் ஸ்டார் என்று சொல்லுறீங்க. அப்படி பாத்தா அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் கூடத்தானே மோதனும்?
உங்க தலைவரை விட வயசுலயும், சினிமா அனுபவத்துலயும் பல வருசம் சின்னவரா இருக்கற விஜய்யை பாத்து ஏன் ஓயாம கதறிட்டு இருக்கீங்க? என்று தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். தற்போது இவருடைய பதிவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
Listen News!