தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக கொடிகட்டி பறப்பவர் அனிருத்.. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் இசை அமைத்துள்ளார். தற்போது மதராஸி, ஜெயிலர் 2, ஜனநாயகன் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இவருடைய இசை தான் பெரிய அளவில் பேசப்பட்டது. கூலி திரைப்படத்தின் கதை டல்லாக இருந்த போதும் அதனை தூக்கி நிறுத்தும் வகையில் அனிருத்தின் பிஜிஎம் காணப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர்.
சமீபத்தில் அனிருத் வழங்கிய பேட்டி ஒன்றில், தான் ஒரு பாடலுக்கு இசையமைக்கும் போது இரண்டு வரிகளுக்கு இசையமைக்க சிக்கல் ஏற்பட்டதாகவும் அதை செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ பயன்படுத்தி இசையை உருவாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அனிருத்தின் மற்றும் ஒரு நேர்காணல் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், சின்ன வயசுல கல்யாணத்துக்கு வாசிக்க போனபோது 500 சம்பளம் கொடுத்தாங்க.. சில நேரம் அத கூட கொடுக்க மாட்டாங்க.. வெறும் வெத்தலை பாக்கு மட்டும் கொடுத்து நன்றி என்று சொல்லி அனுப்புவாங்க.. ஆனா இப்போ எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் அந்த சந்தோஷம் கிடைத்ததே இல்லை என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
Listen News!