• Aug 16 2025

உங்கள் அன்பிற்கு நான் அடிமை.. தனது ஸ்டைலில் நாயுடுவின் வாழ்த்துக்கு பதிலளித்த ரஜினி..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக ஊடகங்களின் வேகமான பரவல் மற்றும் ரசிகர்களின் பேரன்பு கொண்ட இந்திய சினிமா உலகத்தில், ஒரு நடிகரின் சாதனை பொது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில், இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது 50 ஆண்டுகால திரைத்துறை பயணத்தை தற்பொழுது நிறைவு செய்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


அவற்றில், ஒரு முக்கியமான வாழ்த்து, ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவிடமிருந்து வந்தது. அவரின் உணர்வுபூர்வமான பாராட்டு, தமிழ்நாட்டை தாண்டி தென்னிந்திய திரையுலகில் ரஜினியின் தாக்கத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியது. இந்த வாழ்த்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பதிலளித்து தனது "X" தளப் பக்கத்தில் நன்றியை தெரிவித்தார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


சந்திரபாபு தனது பதிவில்," திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை முழுவதும், தனது சிறப்பான நடிப்பால் மில்லியன் கணக்கானவர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த தனது படங்களை ஒரு ஊடகமாகவும் பயன்படுத்தியுள்ளார். அவரது படைப்புகள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கத் தூண்டியுள்ளன. அவருக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.." என்று கூறியுள்ளார்.


இந்த பதிவினைப் பார்த்த ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், " மதிப்பிற்குரிய மற்றும் அன்பான சந்திரபாபு நாயுடு அவர்களே, உங்கள் அன்பான வார்த்தைகளால் நான் உண்மையிலேயே நெகிழ்ச்சியடைந்தேன். உங்கள் அன்பான செய்தி எனக்கு மிகவும் அர்த்தம் தருகிறது. உங்களைப் போன்றவர்களின் அன்பு மற்றும் நட்புடன், சினிமா மூலம் எனது சிறப்பை தொடர்ந்து வழங்க நான் பணிவாகவும் உத்வேகமாகவும் உள்ளேன். மனமார்ந்த நன்றி." எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement