• Jun 12 2026

டியூட் 2 வருகிறதா.? ஆனால் ஒரு பெரிய ட்விஸ்ட்.. இயக்குநர் கொடுத்த கலக்கலான அப்டேட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம், காதல் மற்றும் காமெடி கலந்த கதைக்களத்தால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்து வெற்றிப் பட்டியலில் இடம்பிடித்தது.

இந்தப் படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருந்தார். சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் இவர் இயக்கிய முதல் படம் ‘டியூட்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ரோகினி, நேகா ஷெட்டி மற்றும் பரிதாபங்கள் ராகுல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ‘டியூட் 2’ குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

அவர் கூறுகையில், “டியூட் இரண்டாம் பாகம் குறித்து பிரதீப் ரங்கநாதனுடன் பேசியுள்ளேன். ஆனால் அது நேரடி தொடர்ச்சியாக இருக்குமா அல்லது அதே யுனிவர்ஸில் புதிய கதையாக அமையுமா என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு தகவலே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ‘டியூட்’ ரசிகர்களிடையே இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement