பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தெலுங்கு சினிமாவின் பிரமாண்டமான வரலாற்றுப் படைப்பு ‘ஹரி ஹர வீர மல்லு’ தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம், நீண்ட காலம் தாமதமாகி இறுதியில் இன்று (ஜூலை 24) வெளியாகியுள்ளது. இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத் தொடங்கி ஜோதி கிருஷ்ணா முடித்துவைத்தார்.
படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ரசிகர்களிடமிருந்து வந்திருக்கும் முதல் விமர்சனங்கள் கலவையானவையாக அமைந்துள்ளன. சிலர் படத்தை பாராட்டியிருந்தாலும், பெரும்பாலானோர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என மோசமான விமர்சனங்களையும் கூறியுள்ளனர்.
‘ஹரி ஹர வீர மல்லு’ என்பது 17-ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியிலான பூரண படைப்பு. பண்டைய இந்திய வீரர்களின் வாழ்வியல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் படம், மொத்தத்தில் ஒரு ஆக்ஷன்-அட்வென்ச்சர் படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், நிதி அகர்வால், பாபி தியோல் மற்றும் சத்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த சிலர், முதல் பாதியும், இரண்டாம் பாதி முடிவும் தடுமாறியதாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், இசை மற்றும் பின்னணி இசை மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் சில ரசிகர்கள், " இந்த படம் பவன் கல்யாண் ரசிகர்களுக்காக உருவாகிய படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு வரலாற்றுப் படமாக இதில் உள்ள தொழில்நுட்ப பிழைகள் மற்றும் அமைப்புசார் தவறுகள் பார்வையாளர்களை திருப்திப்படுத்தவில்லை." எனவும் கூறினர்.
Listen News!