• Apr 16 2026

சில நிமிடங்களில் மில்லியன் லைக்ஸ்.. பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸில் என்ன ஸ்பெஷல்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை பிரியங்கா சோப்ரா 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம், விஜய் உடன் இணைந்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், பின்னர் பாலிவுட் திரையுலகில் தன்னுடைய திறமையால் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார்.


பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் வரை தனது பயணத்தை விரிவுபடுத்திய பிரியங்கா சோப்ரா, உலகளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக Instagram மூலம் வெளியிடும் அவரது பதிவுகள் சில நிமிடங்களில் வைரலாகும்.

இந்நிலையில், தற்போது இணையத்தில் வெளியான அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் அவர் இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவரது அழகு மற்றும் தனித்துவமான ஸ்டைலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement