• May 16 2026

பணத்தை விட மிருணாள் தாக்கூர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் தெரியுமா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் மிருணாள் தாக்கூர் சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில், “சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், கனத்த இதயத்துடன் நான் வேண்டாம் என்றே சொல்லி விடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சீதா ராமன் படத்தில் நடித்த சீதா மகாலட்சுமி மற்றும் Hi Nanna படத்தில் நடித்த யஷ்னா போன்ற கதாபாத்திரங்கள் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கற்கள் எனவும் கூறினார். இப்படிப்பட்ட ஆழமான மற்றும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களுக்காக தான் காத்திருக்கிறேன் என்றும் அவர் வலியுறுத்தினார்.


“எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும், நான் சரியான படத்தை தேர்வு செய்யவே விரும்புகிறேன்.” என்ற அவரது கருத்து, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. தற்போதைய சினிமா சூழலில் சம்பளத்தை விட கதைக்கு முன்னுரிமை அளிக்கும் நடிகைகள் குறைவாக உள்ள நிலையில், மிருணாள் தாக்கூரின் இந்த நிலைப்பாடு தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த அணுகுமுறையால், எதிர்காலத்தில் மேலும் வலுவான கதாபாத்திரங்களில் அவர் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement