• May 15 2026

முதல்வராவேன் என்பதை அன்றே கணித்தாரா விஜய்.? நடிகர் தாமு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்..

shali / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் தாமு சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. “நாளை தீர்ப்பு” திரைப்பட காலத்திலேயே விஜய் சமூக பொறுப்பைப் பற்றி அதிகமாக சிந்தித்தவர் என்று தாமு குறிப்பிட்டுள்ளார். 


அந்த படம் முடிந்தபின், பெண்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியதையும் அவர் நினைவுகூர்ந்தார். மக்கள் நலனில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு ஆரம்பத்திலேயே இருந்ததாகவும், முதல்வராக வேண்டும் என்ற ஆசையை கூட தனிப்பட்ட முறையில் பகிர்ந்ததாகவும் தாமு தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணமே பின்னர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல சமூக சேவைகள் செய்வதற்கு வழிவகுத்தது. கல்வி உதவி, நிவாரணப் பணிகள், மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழியாக விஜய் தனது ரசிகர் வட்டத்தை சமூக இயக்கமாக மாற்றியமைத்தார். தற்போது அவர் தவெக கட்சி மூலம் அரசியல் அரங்கில் அதிகாரபூர்வமாக களம் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாமுவின் இந்த வெளிப்படையான கருத்துக்கள், விஜயின் அரசியல் பயணம் ஒரு திடீர் முடிவு அல்ல, நீண்ட கால திட்டமிடலின் விளைவாகும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.


Advertisement

Advertisement