தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது பல்துறை திறமைகளை நிரூபித்ததோடு, ஹீரோவாகவும் இயக்குநராகவும் தன்னை நிலைநாட்டியுள்ளார். இவர் தற்போது நடித்து முடித்து எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘குபேரா’ (Kubera) பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், மும்பை தாராவி பகுதியில் நடக்கும் ஒரு அரசியல் திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டது என பதிவுகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் தனுஷ் மட்டும் இல்லாமல், தெலுங்கு சினிமாவின் இளவரசனாக கருதப்படும் நாகார்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அத்துடன், ராஷ்மிகா மந்தனா இப்படத்தின் முக்கிய கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் ஒரு சாதாரண பெண்ணாகத் தொடங்கி, சமூகத்தின் மாற்றத்திற்கு முன்னிலை வகிக்கும் அளவுக்கு வலிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது ராஷ்மிகாவின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமையப் போகிறதெனவும் கூறப்படுகின்றது.
‘குபேரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இதன்மூலம், இது தனுஷின் மிகப்பெரிய பான் இந்தியா முயற்சி எனக் கூறலாம். வருகின்ற ஜூன் 20ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாவதற்கான திட்டம் முடிவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘குபேரா’ திரைப்படத்திற்கு இந்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC)’ ‘U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், CBFC வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இப்படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் (182 நிமிடங்கள்) என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் நடித்த படங்களில் மிக நீண்ட நேரம் கொண்ட படங்களில் ஒன்றாகும்.
181 minutes of drama, emotion, love, greed, thrill, and everything in between!#Kuberaa - A complete U/A socio-drama that promises a fresh cinematic experience ❤️🔥
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 18, 2025
Book your tickets now: https://t.co/w7l02LQuk7 #Kuberaa in cinemas June 20, 2025.#SekharKammulasKuberaa… pic.twitter.com/od1JCT6fZ7
Listen News!