• Apr 18 2026

"குட் பேட் அக்லி"படத்தில் இளையராஜா பாடல்கள் மீதான பிரச்சனைக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இசை மேதை இளையராஜா பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்துறார்கள் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக, நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திய தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


அதாவது, “இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி” போன்ற பாடல்கள், ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனை நீக்க வேண்டும் எனவே இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் ஆரம்ப கட்டத்தில் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த உத்தரவு, பாடல்களுக்கான உரிமைகள் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 

இந்நிலையில், உயர் நீதிமன்றம் தற்பொழுது இந்த பிரச்சினை குறித்து முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. இளையராஜாவுக்கு பாடல்களை உருமாற்றம் செய்யாமல் பாதுகாப்பதற்கான உரிமை உள்ளது.

சமீபத்தில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இசையமைப்பாளர் பயன்படுத்திய அவரது பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தற்பொழுது அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் விசாரணை ஜனவரி 6, 2026 தேதிக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement