• May 28 2026

10 நாட்களில் மாற்றம் எதிர்பார்க்க முடியாது… விஜய்யை நம்புகிறேன்.! சகநடிகை பகீர்

shali / 2 days ago

Advertisement

Listen News!

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. அப்போது அவர் கூறியதாவது, “முதலமைச்சர் விஜய் எனக்கு தம்பி போன்றவர் எனச் சொல்லுவதில் பெருமை கொள்கிறேன்.

இன்று நாம் ஒரு தெளிவான அரசாங்கத்தின் செயல்பாட்டை காண முடிகிறது. மக்கள் நலனுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தவெக அரசு செயல்படுகிறது.” எனத் தெரிவித்தார்.


மேலும் அவர் பேசுகையில், “ஆட்சி அமைந்து வெறும் 10 நாட்களே ஆகின்றன. இவ்வளவு குறுகிய காலத்தில் பெரிய மாற்றங்களை எதிர்பார்ப்பது சரியல்ல. ஆனால் மக்கள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் தான் இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காக்கும் வகையில் அரசு செயல்படும் என நம்புகிறேன். அரசுக்கு சிறிது நேரம் வழங்கப்பட்டால், நிச்சயமாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் ஏற்படும்.” என்றும் கூறினார்.

 அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் இந்த சந்திப்பு கவனத்தை பெற்றுள்ளது. குஷ்புவின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. 

Advertisement

Advertisement