• Apr 16 2026

இசைப்புயல் இசையில் வெளியான 'அயலான்' திரைப்பட பாடல்! ரசிகர்கள் வரவேற்பு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயனின் புதுத்திரைப்படமான அயலான் எதிர் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தது. எனினும் தற்போது பல தடைகளை தாண்டி ஒரு சூப்பர் பாடல் ரிலீசாகி உள்ளது.

இந்த படத்தின் பட பிடிப்புகள் ஆரம்பமாகியே கிட்டத்தட்ட 3 வருடங்கள் கடந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் மாறி இன்னொரு தயாரிப்பாளர் வந்து ஆரம்பத்திலே பல இன்னல்கள் எதிர்கொண்டது. 


தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக இருந்த நிலையில் கட்டாயமாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என தகவல் சமீபத்தில் வெளியானது. அந்த திரைப்படத்தின் இயக்குனர் , இசையமைப்பாளர், நடிகர் என அனைவரும் நல்ல படங்களை கொடுத்தவர்கள் தான்.


இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தில் இருந்து அயலா அயலா லிரிக்கள் பாடல் வெளியாகியுள்ளது.





Advertisement

Advertisement