‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் விஷால் வெங்கட் தனது அடுத்த படைப்பு ‘பாம் (BOMB)’ திரைப்படமாக இருக்கிறது. இந்த திரில்லர் படத்தில், சிறந்த நடிகராக வலம் வரும் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், படத்தில் காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் உள்ளிட்ட பலர் முக்கிய துணை வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான டி. இமான் இசையமைக்க, ராஜ்குமார் ஒளிப்பதிவையும், பிரசன்னா படத்தொகுப்பையும் கவனித்து இருக்கின்றனர்.
சமீபத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் டீசர், ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர் மூலம் படத்தின் த்ரில்லர் மயமான சூழ்நிலையும், பரபரப்பான திரைக்கதையும் நன்கு உணர்த்தியுள்ளது. இந்நிலையில், ‘பாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Listen News!