• Jun 27 2025

காமெடியனை இப்போது ஹீரோவாக ரசிக்கத் தயாரா..? ‘MR.ZOO KEEPER’ படத்தின் சூப்பர் அப்டேட்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகர் 'புகழ்', தனது கேரியரில் ஒரு புதிய அத்தியாயமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘MR.ZOO KEEPER’.


இந்தப் படத்தின் தயாரிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது படக்குழு ஜூன் 27, 2025 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

விஜய் டீவியின் ‘Cooku With Comali’ நிகழ்ச்சி மூலம் வெகுவாக பிரபலமானவர் புகழ். தனது நேர்த்தியான நகைச்சுவை, இயல்பான நடிப்பு, பேச்சு மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர்.


இந்த புகழ், இந்த முறை கதாநாயகனாக வருவதாக அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. ‘MR.ZOO KEEPER’ என்பது வெறும் ஹீரோ என்ட்ரி படம் அல்ல என்கின்ற வகையில், இதில் புகழின் தனித்துவமான குணநலன்கள் போன்ற அனைத்தும் கலந்துள்ளதைக் காணமுடிகிறது.

படக்குழுவின் தகவலின்படி, கதைக்கரு ஒரு Zoo Keeper எனும் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது, ஒரு சாதாரண மனிதனுக்கும், பல விலங்குகளுக்கும் இடையிலான உறவு, பொறுப்புகள், காதல், நகைச்சுவை மற்றும் சிக்கல்கள் ஆகியவை படம் முழுவதும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement