• Apr 26 2026

பெண் கதைகளை ஆண்கள் ஏன் புரிஞ்சுக்கிறதில்ல? பாலின பேதம் குறித்து நடிகை பார்வதி பகீர்.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகை பார்வதி திருவோத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் கதைகள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். குறிப்பாக “women oriented” என்ற பிரிவை பற்றி அவர் வெளிப்படையாக தனது பார்வையை முன்வைத்துள்ளார்.

அவரின் கருத்துப்படி, பெண்களை மையப்படுத்திய கதைகளை தனியாக “women oriented” என பிரிப்பது தேவையற்றது. அதற்கு பதிலாக, அனைத்து கதைகளும் “human oriented” கதைகளாகவே பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஒரு கதை மனிதர்களின் உணர்வுகள், அனுபவங்கள், வாழ்க்கைச் சூழல்கள் ஆகியவற்றை பிரதிபலிப்பதே முக்கியம் என அவர் கூறுகிறார்.


மேலும், பெண்களின் கதைகள் தனியாக பிரிக்கப்பட்டு பார்க்கப்படுவது தான் பெரிய பிரச்சினை என்றும், அதுவே பாலின அடிப்படையிலான பிரிவினையை உருவாக்குகிறது என்றும் பார்வதி குறிப்பிட்டுள்ளார். ஆண்களின் கதைகளை பெண்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் நிலையில், பெண்களின் கதைகளையும் ஆண்கள் புரிந்து கொள்ள முடியாதது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.

இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, சினிமாவில் உள்ள பாலின வேறுபாடுகளை குறைக்கும் நோக்கில் இது போன்ற சிந்தனைகள் அவசியம் என கூறுகின்றனர்.

Advertisement

Advertisement