• May 15 2026

தவமாய் தவமிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்த இளவரசு.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு உணர்ச்சி மிகுந்த காட்சி குறித்து இளவரசு பகிர்ந்துள்ள நினைவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த காட்சியில் தீபாவளி நாளில் கூட கையில் பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை மனிதர்களின் நிலையை மிகவும் இயல்பாகவும், உருக்கமாகவும் வெளிப்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.


அந்த காட்சியை நினைவுகூர்ந்த அவர், “தீபாவளி அன்னைக்கு கையில் காசு இருக்காது, நான் கிளம்பி போயிடுவேன். அப்போது திடீரென்று ஓடி வந்து அரசியல் கட்சி தலைவர் போஸ்டர் ஒட்டணும் என்று கூட்டிட்டு போவார். நாங்கள் இருவரும் போஸ்டர் ஒட்டும் போது, அந்த பக்கம் அவர் அழுதுட்டு இருப்பார், இந்த பக்கம் நான் அழுதுட்டு இருப்பேன். அந்த சீனில் நாங்க ரெண்டுபேரும் எங்களை மறந்து நடிச்சோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த காட்சியில் சார்லி உடன் நடித்த அனுபவத்தை அவர் மிகுந்த உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும், “முத்தையா அழகரா நடிச்ச அந்த அனுபவம் படம் மட்டும் இல்ல, ஏழை அப்பாக்களின் வலியை பிரதிபலிக்கும் ஒரு உண்மை” என்றும் கூறியுள்ளார்.

இளவரசின் இந்த உருக்கமான பேச்சு ரசிகர்களின் மனதை தொட்டு, அந்த காட்சியை மீண்டும் நினைவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement