• May 16 2026

காசி மாயனாக மாறும் கருணாஸ்.. தனுஷின் 'கர' படத்திலிருந்து வெளியான அதிரடி போஸ்டர்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு முக்கியமான படங்களில் பிஸியாக உள்ள நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘போர் தொழில்’ மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா, இந்தப் படத்திலும் வித்தியாசமான கதையம்சத்துடன் ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார்.


இந்தப் படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். இசையமைப்பை G. V. பிரகாஷ்குமார் மேற்கொண்டு வர, ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனித்துள்ளார்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்னேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தற்போது படக்குழு ‘கர’ திரைப்படத்தின் அறிமுக போஸ்டர்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், புதிய அப்டேட்டாக நடிகர் கருணாஸ் இந்தப் படத்தில் ‘காசி மாயன்’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரது கேரக்டர் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘கர’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

Advertisement

Advertisement