• Aug 10 2025

ஆர்த்தி–ரவியின் இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள்! மனதை கவரும் வார்த்தைகளால் வாழ்த்திய ஆர்த்தி

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் புகழ் பெற்ற தம்பதிகள்  ரவி மோகன் மற்றும்  ஆர்த்தி, தங்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக பிரிந்து வாழ்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததிலிருந்து, ரசிகர்கள் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். 


இந்நிலையில், இன்றைய நாள், ஆகஸ்ட் 10ஆம் தேதி, இந்த முன்னணி ஜோடியின் இரண்டாவது மகன் அயானின் பிறந்த நாள் என்பதனால், ஆர்த்தி தனது மகனுக்காக ஒரு உணர்வுபூர்வமான பதிவினைப்  பகிர்ந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுக்காக ஆர்த்தி பகிர்ந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது மகன் அயானுக்கு சமர்ப்பித்த வாழ்த்துச் செய்தியில், 


"என் பாண்டா குட்டி.. கடினமாக இருக்கும் போது சிரிப்பது, அநியாயம் நடக்கும் போது பொறுமையாக இருப்பது, ஒளி ஒருபோதும் விலகாதது எனக் கூறுவது போல சிரிப்பது.. உன்னுடைய ஸ்பிரிட் அனிமல் வேறு எதுவாக இருக்கும்? 100% பாண்டா." எனக் கூறியுள்ளார். 

இந்த பதிவு மிகுந்த மென்மையும், தாய்மையுடனான உணர்ச்சிகளும் நிறைந்ததாக ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது. இந்த பதிவின் ஊடாக, ஆர்த்தி தனது தாய்மையின் அன்பை வெளிப்படுத்துகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement