• Apr 16 2026

விஜய் சேதுபதிக்கு ஜோடி சேரும் இளம் நடிகை..! தமிழ் சினிமாவில் உருவாகும் ரொமாண்டிக் காம்போ!

shali / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், புதிய மெகா புராஜெக்ட் உருவாகி வருகின்றது. பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான பூரி ஜெகன்நாத் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் தபு இணையும் புதிய படத்தில் தற்போது ‘வாத்தி’ படத்தின் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.


இந்த கூட்டணி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றது. பூரி ஜெகன்நாத், தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குநராக மட்டுமின்றி, பல ஹிட் படங்களை உருவாக்கிய தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். 


இந்த முறை அவர் தயாரிக்கும் புதிய திரைப்படம், ஒரு  திகில், ஆக்‌ஷன் கலந்து உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பூரி ஜெகன்நாத் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், சம்யுக்தா இணைந்திருப்பது அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement