• Apr 17 2026

பாண்டியன் மீது வீண்பழி? பளார் பளார் என கதிருக்கு விழுந்த அடி! பல்டியடித்த பாக்கியா? புதிய திருப்பங்களுடன் மகா சங்கமம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கம் தொடரில் இனி என்ன நடைபெற போகிறது என பார்ப்போம்.

ராஜீ - கதிரின் வருகையால் இரு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதன்போது என் தங்கச்சியை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்து இருக்கியா? என கதிரை அடிக்கச் செல்கிறார் ராஜியின் அண்ணன்.

அந்த நேரத்தில் அனைவரையும் தடுத்த பாக்கியா, நிறுத்துங்க.. நான்தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். அவங்க ரெண்டு பேரும் காதலிப்பதாக சொன்னாங்க.. அதனால தான்  கல்யாணம் பண்ணி வச்சேன் என்று சொல்கிறார்.


மேலும் ராஜி கொண்டு வந்த நகை, பணம் எல்லாம் எங்கே என முத்து வீட்டார் கேட்க, அது எல்லாம் செலவாகிவிட்டது என கதிர் பதில் சொல்ல, அது எல்லாம் உங்க அப்பன் கிட்டயா கொடுத்தா? என கேட்க, அந்த நேரத்தில் வந்த பாண்டியன்,  திருட்டு கல்யாணம் பண்ணிட்டு எனக்கு கெட்ட பெயர்வாங்கி தாரியா? என கதிருக்கு அறைகிறார்.

இதன் போதும் ஒன்றுமே பேசாமல் ராஜி அழுது கொண்டிருக்க, கதிர் அவரை பார்த்து முறைக்கிறார். இதுதான் தற்போது வெளியான அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement