• Apr 16 2026

தமிழ் சினிமாவுக்கே ரெட் அலர்ட்... திரும்பிய பக்கமெல்லாம் அடிபொலி ரெஸ்பான்ஸ் தான்! 90 கோடியை கடந்த மஞ்சுமெல் பாய்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.

சிதம்பரம் என்பவர் இயற்றியுள்ள இந்த படம், கேரளாவில் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்ள, அவரை அவரது நண்பர்கள்  எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தமிழ் டப்பிங் இல்லாமல் படம் திரையிடப்பட்டாலும், பல்வேறு திரையரங்குகளில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. 


தமிழ்நாட்டில் வெளியான மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி முதல் பல பிரபல நடிகர்கள் வரை நடித்த படங்களே  10 கோடி வசூலை தாண்டாத நிலையில்,  மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 10 கோடி வசூலைபெற்று சாதனை படைத்து இருந்தது.

இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 2வது வார முடிவில் 90 கோடி வசூலை கடந்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் 100 கோடி வசூலை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement