நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை நிக்கோலை சச் தேவ் சமீபத்தில் ஒரு அக்கறை மிக்க மற்றும் உணர்ச்சிப்பூர்வமான செயலுக்காக பாராட்டை பெற்றுள்ளனர். இந்த தம்பதி, சிட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை ஷாப்பிங், கேக் வெக்கும், ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி அவர்களுடன் மகிழ்ச்சியாக ஒரு நாளை கழித்தனர்.
அந்த நாள் முழுவதும் குழந்தைகள் கொண்டாட்ட மனோபாவத்துடன் காணப்பட்டனர். ஷாப்பிங்கிற்குப் பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்றாக கேக் வெக்குவதிலும், பின்னர் அதை பரிமாறிக் கொண்டாடுவதிலும் உற்சாகமாக கலந்து கொண்டனர். வரலட்சுமியும் நிக்கோலையும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் தேவைகள் மற்றும் ஆசைகளை கேட்டறிந்தனர். குழந்தைகளுடன் ஆடி, பாடி, ஒரு குடும்ப உறுப்பினரைப் போல உரையாடிய இவர்கள், அவர்களின் முகங்களில் புன்னகையை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிகழ்வு சமூக பொறுப்பின் சிறந்த எடுத்துக்காட்டாகும். "எங்களால் முடிந்த அளவுக்குப் பங்களிக்க விரும்பினோம். இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சியே எங்களுக்கு கிடைத்த பெரிய பரிசு," என்று வரலட்சுமி கூறினார்.
Listen News!