• Aug 18 2025

இன்னைக்கும் 8 ஷோ ஹவுஸ்ஃபுல்.. பேய்த்தனமான புக்கிங்ஸ்.. தவிடு பொடியான விமர்சனங்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த திரைப்படம் தான் கூலி. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், திரில்லர் நிறைந்த கதைக் களத்துடன்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும் கூலி படத்தை பலரும் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து வருகின்றனர்.

கூலி படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. வெளிநாடுகளில் கூலி டிக்கெட் முன்பதிவில் மட்டும் லாபத்தை பெற்றுக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


கூலி படம் வெளியான முதல் நாளில் மட்டும் 151 கோடி வரையில் வசூலித்து இருந்தது. இதனால் தமிழ் சினிமாவிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற சாதனையை கூலி திரைப்படம் பெற்றிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் கூலி படத்தின் வசூல் அதிகரித்தது.


இந்த நிலையில், இன்றைய தினமும் எட்டு ஷோக்கள் ஹவுஸ் ஃபுல் என கமலா திரையரங்க உரிமையாளர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்.  இதனை ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டியும் கொண்டாடி உள்ளார்கள். தற்போது இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக காணப்படுகிறது.

மேலும் அவர் கூறுகையில், கூலி திரைப்படம் வெளியாகி  நான்காவது நாள்.  இன்றைக்கு வரைக்கும் பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைச்சு இருக்கு.  முழுக்க முழுக்க ஹவுஸ்புல்.. எங்க தியேட்டரில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்.. வெறித்தனமான டிக்கெட் புக்கிங் போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு டிக்கெட் கூட பிரேக் ஆகவில்லை. கூலி படம் பற்றி மோசமான கருத்துக்கள் எழுந்த போதும் அது எதுவுமே கலெக்ஷனையோ  ஆடியன்சையோ பாதிக்கவில்லை.  நாங்க வார்  2 கூட தியேட்டரில் போடல.  ரெண்டு ஷோவுமே  கூலி தான்  என்று தெரிவித்துள்ளனர்.

கூலி திரைப்படம் பற்றி படுமோசமாக விமர்சனங்கள் எழுந்தபோதும் இதை பார்த்தவர்கள் இந்த படத்தில் ரஜினியின் ஸ்டைல், எனர்ஜி வேற லெவலில் உள்ளது. படம் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். கூலி  படம் உண்மையாகவே சூப்பரா இருக்கு என்று தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் கூலி திரைப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement