• Jan 19 2025

ஷூட்டிங்ல கொஞ்சமும் வெட்கப்படல, என் காலடில அத பண்ணினாங்க..! விஜயா பற்றி உடைத்த ரோகிணி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில், சன் டிவி தொடர்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்து வந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நான்காவது இடத்திற்கு முன்னிலையில் வந்துள்ளது.

சிறகடித்த ஆசை சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகிறது. இதில் நடிக்கும் நடிகர்களையும் தமது சொந்த உறவுகளைப் போலவே பார்க்க தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்.

இந்த சீரியலில் 3 மகன்களுக்கு அம்மாவான விஜயா, தன் வீட்டுக்கு வந்த மருமகள்களை அவர்களின் நிலைக்கேற்ப கொண்டு நடத்துகிறார். அதாவது பணக்கார வீட்டு மருமகள்கள் என ரோகிணியையும் ஸ்ருதியையும் நன்றாக கவனித்துக் கொள்ளும் விஜயா, ஏழை வீட்டு பெண்ணான மீனாவை மட்டும் வீட்டு வேலை வாங்குவது என்று தொடர்ந்தும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்.


இந்த சீரியலில் ரோகினி கதாபாத்திரம் கொஞ்சம் கிரிமினலாக இருந்தாலும், ரசிகர்கள் அவரை ரசித்துப் பார்க்கும் நிலையில்தான் உள்ளார்கள். எனினும் எப்போது ரோகினியின் தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் முத்துவுக்கு தெரியவரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை, அதில் நடிக்கும் விஜயா பற்றி சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.


அதாவது ஷூட்டிங் நடக்கும் போது நான் கட்டியிருந்த சாரி கொஞ்சம் கசங்கி இருந்தாலும் அவர் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். உடனே வந்து சரி செய்து விடுவார். ஆனால் எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கும். என்ன ஆண்டி இப்படி பண்ணுறீங்க என்று கேட்டால், சாரி எப்படி கீழ கசங்கி இருக்கு, நீ எப்படி முன்னுக்குப் போய் நிற்ப.. அப்படி என்று சொல்லி எல்லாவற்றையும் சரி பண்ணி விடுவார்.


வேறு யாரும் இவ்வாறு செய்வது என்றால் யோசிப்பார்கள், வெட்கப்படுவார்கள். ஆனால் அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் என் காலடி வரை சாரியை சரிபார்த்தார் என அவரைப் பற்றி பெருமையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement