• Dec 03 2024

விஜய் மற்றும் விஷால் பற்றி எந்த கேள்விகளும் என்னிடம் கேட்க வேண்டாம்...மீடியா மேல் கொந்தளித்த சூப்பர்ஸ்டார் இதான் காரணமா அடடே...

Kamsi / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் சினிமாத்துறையில் கலக்கி வரும்  நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.அடுத்ததாக உலகளாவிய ரீதியில்  இவர் நடிப்பில் வெளியான  திரைப்படம் தான் லால் சலாம். இந்த படத்தை இவருடைய  மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.


அவருக்கு இணை அவர் மட்டுமே என்ற வகையில் 70 வயதிலும் தில்லாக நடித்து வருகிறார். அரசியல் எல்லாம் நமக்கு வேண்டாம் , சினிமாவே போதும் என்று  இன்னும் அவருடைய ரசிகர்களை மகிழ்விக்கும் முகமாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்திலும்  இணைந்துள்ளார். 


இந்நிலையில் 'வேட்டையன்' படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்ற வேளையில் அப்போது அவரிடம் நடிகர் விஜய் மற்றும் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், 'மன்னிக்கவும்  அரசியல் தொடர்பான எந்த விதமான  கேள்விகளும் இனி என்னிடம் கேட்க வேண்டாம். என்று உறுதியாக கூறிவிட்டு வேகமாக சென்றுள்ளார். 






 

Advertisement

Advertisement