தமிழ் சினிமாவில் அதிகளவு வசூல் பெற்ற படங்களில் ஒன்று "ஆயிரத்தில் ஒருவன்". 2010ல் வெளியான இந்த அற்புதமான படம் ரசிகர்களிடையே இன்று வரை சிறப்பான இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் "ஆயிரத்தில் ஒருவன் 2" உருவாக உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பேட்டியில் இயக்குநர் செல்வராகவன் கூறியதாவது, 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தை எடுப்பதற்காக மிகவும் ஆவலாக இருக்கின்றேன். இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கப் போகின்றார். அதேவேளை, கார்த்தி இல்லாமல் இரண்டாம் பகுதியை எடுப்பது மிகவும் சிக்கலாக இருக்கப் போகின்றது என்றதுடன் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களிடமிருந்து திகதிகள் உறுதியாகக் கிடைத்தவுடன், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
தனுஷும் செல்வராகவனும் சேரும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. காதல் கொண்டேன் , புதுப்பேட்டை , மாறன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இன்றும் பசுமையாக உள்ளது. இப்பொழுது, அதே வெற்றிக் கூட்டணி "ஆயிரத்தில் ஒருவன் 2" மூலமாக மீண்டும் இணைகின்றார்கள் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!