• Jan 18 2025

வடிவேலுக்கு நிகரான பிரபல காமெடி நடிகர் திடீரென உயிரிழப்பு! அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த கலாபவன் ஹனீப் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 

கலாபவன் ஹனீப் மறைவு செய்தியை அறிந்த மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கலாபவன் ஹனீப், மிமிக்ரி செய்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். 


அதன் மூலம் சினிமாவில் அறிமுகமான கலாபவன் ஹனீப், மல்லுவுட் வடிவேலுவாக காமெடியில் சிறந்து  விளங்கி வந்தார்.

இந்நிலையில்,  நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை காரணமாக  கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தனது 63 வது வயதில்  உயிரிழந்தார். 


ஆரம்பத்தில் மிமிக்ரி செய்து பிரபலமான இவர், தனது தனித்துவமான காமெடியால் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். 

மேலும், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என மலையாள டாப் ஹீரோக்களுடன் நடித்த கலாபவன் ஹனீப், காமெடியில் பின்னி பெடலெடுத்துவிடுவார். 

அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு கேரளாவின் மட்டஞ்சேரியில் நடக்கிறது. 

அதேவேளை, தமிழ் ரசிகர்களின் மீம்ஸ் மெட்டீரியலாக வடிவேலு இருப்பது போல, மலையாளத்தில் கலாபவன் ஹனீப் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement