• Aug 08 2025

வைரமுத்துவின் புதிய நூல் வெளியிடும் திகதி அறிவிப்பு....! எப்போது தெரியுமா...?

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட பாடலாசிரியர் வலம் வருபவர்  வைரமுத்து. இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் . இந்த நிலையில் இவர் பல நூல்களையும் எழுதி வருகின்றார். தற்போது எழுதி " வள்ளுவர்மறை வைரமுத்துஉரை " என்ற நூலை வெளியிடும் திகதி குறித்து அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

90s  கால கட்டத்தில்  இருந்து இன்று வரை இவருடைய பாடல் என்றாலே  ரசிகர்கள் மனதிற்கு இதமாக இருக்கும் எனப் பல ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பல நூல்கள் ,கவிதை தொகுப்புக்கள் ,மேடை நாடகங்கள் ,கட்டுரைகள்  எனப் பலவற்றை எழுதி உள்ளார் .இவர் தற்போது நூல் ஒன்றை எழுதி உள்ளதாகவும் அந்த நூலிற்கு " வள்ளுவர் மறை வைரமுத்துஉரை " என்று பெயரிட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில்  பதிவிட்டிருந்தார் .


இந்த நிலையில் இந்நூல் குறித்து புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது  ஜூலை 13 ஆம் திகதி வெளியிடப்போவதாக அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அன்று வைரமுத்துவினுடைய பிறந்த நாளும் ஆகும். இத் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். 













Advertisement

Advertisement