• May 17 2024

திடீரென ரூட்டை மாற்றிய ரம்யா பாண்டியன்... என்ன ஆச்சு இவங்களுக்கு... கமெண்டுகளைத் தெறிக்க விடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ என்ற படத்திலும் நடித்தார். இந்தப் படமானது வெளியாகி இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. 


அதன் பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வராமல் இருந்த அவர், மொட்டை மாடியில் இருந்து இடுப்பு தெரிய எடுத்த கவர்ச்சிப்படங்களால் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறினார் ரம்யா.


இதனால் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.அந்த சீசனில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். அதுமட்டுமல்லாது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும்  கலந்துகொண்ட இவர் 3-ஆம் இடம் பிடித்தார். 


இவ்வாறாக  படங்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பிஸியாக இருந்து வருகின்ற ரம்யா பாண்டியன் சமீபகாலமாக ரசிகர்கள் பலரிடமும் கடுமையான அளவிற்கு திட்டு வாங்கி வருகின்றார்.


இதற்கு காரணம் இவர் அணிந்து கொள்கின்ற ஆடைகளும், கவர்ச்சிப் புகைப்படங்களும் தான். உள்ளாடையோடு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இவர் பலரினதும் சர்ச்சை கருத்துக்களுக்கும் உள்ளாகியிருந்தார்.


இந்நிலையில் தற்போது இவர் பாவாடை, தாவணியுடன் குடும்ப குத்து விளக்கு போல உடையணிந்து அதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "என்ன திடீரென ரூட்டை மாற்றி விட்டீர்கள்" எனக் கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement