பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 8 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 93 வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் முதலாவதாக சுனிதா என்ட்ரி கொடுத்துள்ளார். இதன்போது அவர் உள்ளே உள்ள போட்டியாளர்களை கலாய்த்த வீடியோ செம வைரலாகி வருகின்றது.
அதன்படி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுனிதா, நிறைய பேர் மூஞ்சில அப்படியே சோகமாக தெரியுது. ஜாக்குலின் ஒரு கேம் விளையாடுறாங்க பாரு..மேலும் அவர் எல்லார் கூடவும் ஒட்டி இருப்பதாக சுட்டிக் காட்டி உள்ளார்.
இதை தொடர்ந்து சௌந்தர்யாவை வம்பிழுத்த சுனிதா, டாஸ்க் நடைபெற்றாலும் முகத்தை ஒருமாதிரி வைத்து இருப்பது என அவரைப் போல ஆக்சன் போட்டு காட்டி உள்ளார்.
இறுதியில் விஷாலிடம் பேசிய சுனிதா, "நீ என்னடா.. முக்கோண காதல் ட்ரை பண்ணுறியா? மன்மதன் அம்பு என கூறிவிட்டு ஒரு பக்கம் மோதிரம் வருது இன்னோரு பக்கம் லோகட் வருது என கலாய்த்து தள்ளி உள்ளார்.
Listen News!