• May 17 2024

பிரபல OTT தளத்தில் வெளியாகும் விக்ரம் திரைப்படம்- அட எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 இல் வெளியான திரைப்படம் விக்ரம் திரைப்படம். திரைப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி குவித்து வருகின்றது.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூரியா நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று இதுவரை நிற்காமல் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 365 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் ஐந்து வருடங்களாக யாரும் செய்யாத சாதனையை நமது ஆண்டவர் முறியடித்துள்ளார்.

இவ்வாறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் வருகின்ற ஜூலை 8ஆம் திகதி Disney Plus Hotstar இல் திரைப்படம் வெளியாகும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement