• Aug 06 2025

அடாவடியாக நிற்கும் விஜயா.! நீலிக் கண்ணீர் வடிக்கும் ரோகிணி.. உச்சகட்ட கோபத்தில் முத்து..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா ரோகிணியை பார்த்து பெரிய கோடீஸ்வரி என்று சொல்லி எப்புடி எல்லாம் என்னை ஏமாத்தின இப்ப திருட்டு நகையைக் கொண்டுவந்து கொடுக்கிற உனக்கு பொய் மட்டும் தான் சொல்லத் தெரியுமா என்கிறார். மேலும் மனோஜை ரூமுக்குள்ள இருக்கமால் வெளியில வரச்சொல்லுறார். அதைக் கேட்டு ரோகிணி அழுது கொண்டிருக்கிறார். 


இதனை அடுத்து ஸ்ருதி ரவியைப் பார்த்து நம்மட ரெஸ்டாரெண்டுக்கான design இருக்கு பாக்கிறியா என்று கேட்கிறார். அதுக்கு ரவி எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு நீயே பார் என்கிறார். பின் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து ரவி எனக்கு சொந்த உழைப்பில ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கணும் என்று சொல்லுறார்.

பின் முத்து சீதாவுக்காக மாப்பிள்ளை பார்க்க ஜோதிடரிட்ட போய் நிக்கிறார். அப்ப முத்துவோட friend இதில எல்லாம் உனக்கு நம்பிக்கை இல்ல இப்ப மட்டும் ஏன் இங்க வந்து நிக்கிற என்கிறார். அதுக்கு முத்து என்ன செய்யுறது எல்லாம் சீதாவுக்காக தான் என்று சொல்லுறார். இதனை அடுத்து ஜோதிடர் அருணோட ஜாதகம் தான் பொருந்தி இருக்கு என்று சொல்லுறார். அதுக்கு முத்து கோபத்துடன் அங்கிருந்து போறார்.


இதனை அடுத்து ரவி மீனாவைப் பாத்து புதுசா ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கிறதில ஸ்ருதி ரொம்பவே ஆர்வமா இருக்கிறாள் என்று சொல்லுறார். அதுக்கு மீனா அது நல்ல விஷயம் தானே என்கிறார். பின் ரவி கொஞ்சமாவது experience இருந்தால் தான் நல்லது அப்புடி இல்லாட்டி ஏதாவது பிரச்சனை தான் வரும் என்கிறார். இதனை அடுத்து ரோகிணி இந்த வாரத்துக்குள்ள பணம் வந்திரும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement