• Apr 15 2025

மார்கெட் குறைந்ததா..? பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் விஜய் சேதுபதி..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

சூது கவ்வும் ,விடுதலை ,சேதுபதி ,மகாராஜா போன்ற படங்களில் நடித்து வரிசையில் ஹிட் படங்களை தந்த நடிகர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் பிக்பாஸ் சீசன் 8 இல் கமல் காசனுக்கு பதிலாக தொகுப்பாளராக கலந்து சிறப்பாக தீர்ப்பு வழங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.


விடுதலை 2 வெற்றியின் பின்னர் மந்தமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. முதலில் இவரது பட அப்டேட்டுகள் பரபரப்பாக வெளியாகும் ஆனால் தற்போது எதுவித தகவலும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருக்கின்றனர்.


மேலும் இவர் ஏஸ்னு ஒரு படம் நடித்து முடித்துள்ளார். மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஆகாச வீரன் எனும் ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவை தவிர இவரிடம் பெரிய பட கமிட்மென்ட் இல்லை எனவும் மேலும் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் அட்லி தயாரிப்பில் பட நடிக்கவுள்ளதாக செய்திகள் மாத்திரமே வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement