• Dec 04 2024

தனுஷ் - நயன்தாரா திருமண நிகழ்ச்சியில் சந்திப்பு..! பேசாமல் விலகிய இருவரின் வீடியோ வைரல்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் இடையிலேயே, இருவரும் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியில் அவர்களது நேருக்கு நேர் சந்திப்பு தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.

முந்தைய வாரத்தில், தனுஷ் மீது நயன்தாரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்த அனுமதி கோர தனுஷை அணுகியபோது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நயன்தாரா தெரிவித்திருந்தார். இது தனுஷ்-நயன்தாரா இடையே மோதலை உருவாக்கியது.


இந்த விவாதங்கள் எழுந்திருந்த போதிலும், இன்று தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் ஒரே வரிசையில் தனுஷ், நயன்தாரா இருவரும் முன்னணி வரிசையில் (சற்று இடைவெளி விட்டு) அமர்ந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அது மட்டுமல்லாது இருவருக்கும் இடையே எந்த உரையாடலும் நடக்கவில்லை.

அதேநேரத்தில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானதை தொடர்ந்து, இதில் தனுஷின் அனுமதி இல்லாமல் காட்சிகள் இடம்பெற்றது மீண்டும் ஒரு விவாதமாக அமைந்தது.தனுஷ் இந்த விவகாரத்தில் எந்த பதிலும் அளிக்காத நிலையில், இந்த சந்திப்பு புதிய சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement