நடிகர் அஜித் தற்போது துபாயில் நடைபெறும் 24 மணி நேர கார் ரேஸில் தனது குழுவுடன் கலந்துகொண்டு வருகிறார். இந்த ரேஸ் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.மேலும் அஜித் தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார்.இந்நிலையில் கார் ரேஸின் ஸ்டேடியத்தில் அஜித்தின் பாடல் ஒலித்ததை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அஜித் கார் ரேஸ் துவங்குவதற்கு முன்பு அவரை காண வந்த ரசிகர்கள் அரங்கத்தை அதிரவைத்தனர். மேலும், அவரை ஆதரித்து வந்த ரசிகர்களை அஜித் சந்தித்து அவர்களுக்கு நன்றி கூறும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது அஜித்தின் கார் ரேஸினை பார்ப்பதற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் ஒன்று கூடியுள்ளனர்.அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கார் ரேஸினை பார்வையிட சென்றுள்ளார்.அங்கு அஜித்தின் manager சுரேஷ் சந்த்ராவுடன் ஆட்டம் போட்டு வைப் பண்ணியுள்ளனர்.குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
#GoodBadUgly Director Fanboy #Adhikravichandran Cheering for #Ajithkumar ..💥🤩pic.twitter.com/82bnkkceLW
Listen News!