• Jan 19 2025

கன்னட படத்தில் நாயகியாக களமிறங்கிய தமிழ் சீரியல் நடிகை! சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவந்த நடிகை பிரியங்கா குமார், கன்னட மொழி திரைப்படத்தில் நாயகியாக களமிறங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து, காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்காவுக்கு, தாங்கள் வெண்ணிலாவை அதிகம் விரும்புவதாகவும், ஆனால், வெள்ளித்திரையில் தங்களின் நடிப்புக்கு நீங்கள் மேலும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021 ஜனவரி முதல் 2023 செப்டம்பர் வரை காற்றுக்கென்ன வேலி தொடர் பிரபலமாக ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் சுவாமிநாதன் அனந்தராமனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா குமார் நடித்து வந்தார். 


காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தார். இத்தொடரின் மூலம் பிரியங்காவுக்கு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. 

இவ்வாறான நிலையில், கன்னட திரையுலகில் நாயகியாக களமிறங்கிய  பிரியங்கா, கன்னட இயக்குநர் துனியா சூரி இயக்கத்தில் உருவான பேட் மேனர்ஸ்  (Bad Manners) திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 


அத்துடன், இத்திரைப்படம் நவ. 24ஆம் திகதி வெளியான நிலையில், சமூக வலைதளத்தில் 'வாய்ப்பு கிடைத்தால் தற்போது வெளியாகியுள்ள பேட் மேனர்ஸ் திரைப்படத்தை தியேட்டரில் காணுங்கள்' சமூக வலைத்தளத்தில் எனப் பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து, அவருக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement