• Jan 18 2025

இந்த ஒரு வாரத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சூரி முக்கிய வேடத்தில் நடித்த ’கருடன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் பட்ஜெட்டை விட தற்போது இரு மடங்கு வசூல் செய்து விட்டதை அடுத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உட்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை’ படத்திற்கு பிறகு ஹீரோவாக நடித்த ’கருடன்’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து சூரி நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

’கருடன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் இந்த ஒரு வாரத்தில் நல்ல வசூல் செய்திருப்பதாகவும் இந்த ஒரு வாரத்தை தன்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த அனைவருக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞர்கள், பெரியவர்கள், தாய்மார்கள் என அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள் என்றும் இந்த படம் சிறப்பாக அமைப்பதற்கு கடுமையாக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை கொண்டு போய் சேர்த்த பத்திரிகை நண்பர்கள் ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது, 25 வருடங்களுக்கு முன் சென்னைக்கு ஒன்றுமே இல்லாமல் வந்த நான் எதையும் மறக்கவில்லை. இந்த நேரத்தில் நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன் என்றால் அதெல்லாம் நீங்கள் கொடுத்தது தான். கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் விதமாக நான் நல்ல படங்களை கொடுப்பேன், வாழ்நாள் முழுவதும் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் வகையில் படங்களில் நடிப்பேன்’ என்று சூரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement