• Dec 03 2024

பூர்ணிமா- மாயாக்கு சண்டை... இருதுருவங்களாய் மாறும் சகுனிகள் கூட்டணி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் நாளாக கூட்டணி போட்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்த மாயா, பூர்ணிமாவுக்குள் இப்போது விரிசல் ஒன்று உருவாகி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்களுக்கே தெரியாமல் உரசலை உருவாக்கி விட்டார் விஷ்ணு. நேற்றைய பிக்பாஸ் எபிசோடை பொறுத்தவரையில் அவர் பூர்ணிமாவோடு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார். 


அதில் பூர்ணிமா விஷ்ணுவை கவிழ்ப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். அதுதான் மாயாவின் திட்டமும் கூட ஆனால் நடந்து வேறு. விஷ்ணு மாயாவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட போவதாக ஒரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார். அதன் விளைவு தான் மாயா, பூர்ணிமா இருவரும் ஒருவருக்கொருவர் செய்த விவாதம். அதில் மாயா தினேஷுக்கும் பூர்ணிமா விஷ்ணுவுக்கும் சப்போர்ட்டாக மாற தொடங்கியுள்ளனர்.


மேலும் இப்போது டம்மியான போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வர இருக்கும் டாஸ்க்குகளும் கடுமையாக கொடுக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் மாயா சிறப்பான யுக்தியை கையாண்டால் மட்டுமே தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.


இப்பொழுது சிறு பொறியாக இருக்கும் இந்த பிரச்சனை இன்னும் சில தினங்களில் காட்டுத் தீயாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

Advertisement