சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சிந்தாமணிக்கு ஓடர் கொடுக்கிறவரிடம் மீனா உதவிக்குப் போய் நிக்கிறாள். அவர் மீனாவுக்கு உதவி செய்வதற்காக சிந்தாமணியை சந்தித்து பேசுறார். அவர் பேசியவுடனே சிந்தாமணி பணத்த திருப்பிக் கொடுக்கிறாள். பிறகு அவர் அந்தப் பணத்தை வாங்கி மீனாட்ட குடுத்திட்டு இனி என்ர எல்லா ஓடரையும் நீயே செய் என்று சொல்லுறார்.
அதைக் கேட்டு மீனா ரொம்பவே சந்தோசப்படுறாள். பின் அவர் இத எல்லாம் பாத்து நீ தைரியத்த கைவிட்டிராதமா என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து மீனா சிந்தாமணிகிட்ட வந்து ஒரு வேலையில போட்டி இருக்கலாம் ஆனா பொறாமை இருக்க கூடாது என்கிறாள். அத்துடன் அடுத்தவங்கள அழிக்க நினைக்கிறவங்க கண்டிப்பா அழிஞ்சு தான் போவாங்க என்றார்.
பின் மீனா தான் கடனுக்கு வாங்கிய பணத்தைக் கொடுக்க வந்து நிக்கிறாள். அதுக்கு அவர் ஏன் இவளா லேட்டு என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து மீனா நடந்ததெல்லாத்தையும் அவருக்குச் சொல்லுறார். பிறகு இதுக்கெல்லாம் யார் காரணம் என்று அவர் கேட்டார். அதுக்கு மீனா சிந்தாமணி தான் காரணம் என்று சொன்னவுடனே அவர் ஷாக் ஆகுறார்.
பின் சிந்தாமணி தன்ர மனைவி என்று மீனாவுக்கு வெளிக்காட்டாமல் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு நீ முன்னேற கூடாதுனு நினைக்கிற அந்த அம்மா முன்னாடி நீ வாழ்ந்து காட்டோனும் என்கிறார். அதைத் தொடர்ந்து மீனா முத்துவுக்கு கால் எடுத்து நடந்தத எல்லாம் சொல்லுறாள். இதைக் கேட்டு முத்து கோவப்படுறான். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!