• Jan 19 2025

பாலாவை ஹீரோவாக்கும் லாரன்ஸ்! நன்றி சொல்லி பாலா வெளியிட்ட வீடியோ இதோ ! படம் பெயர்....

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் முன்னணி ஹீரோக்களையும் , அரசியல் வாதிகளையும் விட அதிக மக்களால் விரும்பப்படும் நபர் என்றால் அது kpy பாலா எனலாம். ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து கலியுக கர்ணன் என்று மக்களால் அழைக்கப்படும் பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


முன்னணி தொலைக்காட்ச்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் ஊடாக அறிமுகமாகியவர் பாலா ஆவார். தொடர்ந்து பல காமடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் ஊடாக பெருதும் பிரபலமானார்.


இவ்வாறு இருக்கும் இவர் தான் உழைக்கும் பணத்தில் பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தார். பின்பு லாரன்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து பல உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையிலேயே லாரன்ஸ் மேடை ஒன்றில் பேசும் போது இயக்குனர்கள் கதை இருந்தால் கொண்டு வாருங்கள் பாலாவை நான் ஹீரோவாக மாற்றுகிறேன் என்று கூறி இருந்த நிலையில் இதற்கு நன்றி சொல்லும் விதமாக பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வீடியோ இதோ 


Advertisement

Advertisement