• Jan 19 2025

இவருக்கு பதில் இவர்.. விஜய் டிவியின் 'நீ நான் காதல்’ சீரியலில் ‘பாக்கியலட்சுமி’ நடிகர் என்ட்ரி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி தொடர்களை பொருத்தவரை இவருக்கு பதில் இவர் என்ற நடிகர் நடிகைகள் மாற்றம் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது என்பதும் பார்வையாளர்களும் அதற்கு பழகிவிட்டனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாரி என்ற கேரக்டரில் நடித்த நடிகைக்கு பதிலாக ராஜேஸ்வரி என்ற நடிகை மாறியுள்ளார். இவருக்கு பதில் இவர் என்ற டைட்டில் கார்டு இன்றைய எபிசோடில் வந்துள்ளது. இந்த நிலையில் விஜய் டிவியின் இன்னொரு சீரியலில் ஒரு நட்சத்திர மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’நீ நான் காதல்’. இந்த சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் 70 எபிசோடுகளுக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் மனோகர் என்ற கேரக்டரில் நடித்து வந்த ஷர்வன் என்பவர் அதாவது ஆகாஷ் தந்தையாக நடித்து வந்தார் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.



இவருக்கு பதிலாக இந்த சீரியலில் தற்போது அரவிந்த் என்பவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ’பாக்கியலட்சுமி’ ’நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த நிலையில் தற்போது ’நீ நான் காதல்’ சீரியலிலும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இவருக்கு பதில் இவர் என்ற  ஷர்வனுக்கு பதிலாக அரவிந்த் குறித்த டைட்டில் கார்டு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisement

Advertisement