தெலுங்கானா மாநிலத்தில் பெண் தொழிலதிபர் ஒருவர்
தொலைக்காட்சி தொகுப்பாளரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உள்ள நிலையில் அவர்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர்
சமூக வலைதளங்கள் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரை பார்த்து ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. இதையடுத்து இணையத்தில் அவருடைய மொபைல் எண்ணை கண்டுபிடித்து அவருக்கு காதல் டார்ச்சர் கொடுத்ததாகவும் இதனால் எரிச்சல் அடைந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒரு கட்டத்தில் அந்த
பெண் தொழிலதிபரின் மொபைல் நம்பரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து தொலைக்காட்சி தொகுப்பாளரை கடத்த திட்டமிட்ட பெண் தொழிலதிபர் அதற்காக
அடியாட்களை ஏற்பாடு செய்து ஜிபிஎஸ் மூலம் அவர் செல்லும் பாதையையும்
கண்டுபிடித்து கடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி
தொகுப்பாளரை டார்ச்சர் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாகவும் ஒரு கட்டத்தில் டார்ச்சரை
தாங்க முடியாத அந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்
திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததாக தெரிகிறது.
அதன் பின்னர் ஒருவழியாக அந்த பெண் தொழிலதிபரிடம்
இருந்து தப்பித்து வந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்
நேரடியாக காவல்துறையில் சென்று புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு
செய்து பெண் தொழிலதிபரை விசாரித்த
போது அவர் ’தொலைக்காட்சி தொகுப்பாளரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால்தான் கடத்தியதாக
ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரையும்
அவருக்கு துணையாக இருந்த நான்கு அடியாட்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில்
அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா
மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!