தமிழ் சினிமாவில் கோலிசோடா என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் தான் விஜய் மில்டன். இவர் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
2014 ஆம் ஆண்டு வெளியான கோலிசோடா படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பக்கோடா பாண்டி, பசங்க புகழ் முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கீழ் வெளியிட்டார்.
இந்த படத்தில் ஏடிஎம் என்ற கேரக்டரில் சீதா என்பவர் நடித்திருந்தார். இவர் பத்து எண்றதுக்குள்ள என்ற ஒருசில படத்தில் மட்டுமே நடித்தார். ஆனாலும் கோலிசோடா படத்தில் அப்பாவியாக ஆரம்பித்து பின் அதிரடி காட்டும் சீதாவின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரீச்சானது.
இந்த நிலையில், கோலிசோடா படத்தில் நடித்த சீதா பற்றி இயக்குநர் விஜய் மில்டன் ஒரு நேர்காணலில் கூறுகையில், இவரை கண்டுபிடிக்கவே மிகவும் கஷ்டப்பட்டோம். அதாவது, 'ஏடிஎம் (சீதா) கேரக்டரை கண்டுபிடித்ததே தனிக்கதை.
கோலிசோடா படத்தில் சீதா கேரக்டர் தான் படத்தை தூக்கி நிறுத்தப்போகிற கேரக்டர். ஆனால் அந்த கேரக்டர் பெண்ணை முதலில் பார்த்தால் யாருக்கும் பிடிக்கக்கூடாது. பார்க்க பார்க்க தான் பிடிக்கணும். அப்படிபட்ட ஒருவரை தேடினோம்.
அதன்பின், எல்லா இடங்களிலும் தேடினோம், இறுதியாக நாம் தேடும் பெண் கிடைத்தால் அவரிடம் விவரத்தை சொல்லி, ஆபிஸ் நபருக்கு கால் பண்ணுமாறு பலருக்கும் தெரிவித்தோம்.
அப்படி ஒருநாள் நான் மார்க்கெட்டில் நின்ற போது, அந்த பெண் பள்ளி சீருடையில் பேக்கை மாட்டிக்கொண்டு விறுவிறுவென நடந்து சென்றார்.
அவரை பார்த்த நானும், ஆஹா நம்ம படத்துக்கு இவள் சரியா இருப்பாளே என சொல்லிவிட்டு, என்னிடம் இருந்த புல்லட் பைக்கில் பின்னாடியே சென்றேன்.
ஆனால் அவர் அருகே சென்று எப்படி பேசுவது என தெரியாமல், ஒரு இடத்தில் அவளை மடக்கி, என்ட பேரு மில்டன். இதான் என்னோட நம்பர். எனக்கு கொஞ்சம் போன் பண்ணுறீங்களா? என்று சொல்ல, அவர் என்ன நினைத்தாளோ தெரியவில்லை ‘தூ’ என்று துப்பி விட்டு போய் விட்டாள் என விஜய் மில்டன் சீதா பற்றி கூறியிருந்தார்.
Listen News!