விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்தான் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த இவர், தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பெற்று அவர்களுடைய ஒட்டுமொத்த அன்பையும் பெற்றார். இலங்கைத் தமிழில் பேசி ரசிகர்களின் மனதை ஈர்த்தார். இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தபோதும் தைரியமாக விளையாடினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜனனி வெளியேறிய பின்பு லியோ படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. முதல் படமே விஜய், திரிஷா என்பதால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. லியோ படத்தில் அவருடைய கேரக்டர் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நிழல் படத்தின் ஷூட்டிங் ஏற்பட்ட விபத்தில் ஜனனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அதில் அவர் காலில் பெரிய கட்டுடன் நடக்க முடியாமல் இருக்கும் வீடியோ வைரலாகி இருந்தது.
இந்த நிலையில், ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நன்றாக இருப்பதாகவும் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கூடிய விரைவில் மீண்டு வர வேண்டும் என்று தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!