• Jan 19 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸாக என்ட்ரி கொடுத்த போட்டியாளர் இவர் தானா?- கதிகலங்கிப்போன ஹவுஸ்மேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், முதல் நாளே 18 போட்டியாளர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர். 

இதை தொடர்ந்து, முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் நடத்தப்பட்டு அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து கடந்த வாரம் இறுதியாக கானாபாலா  வெளியேறியிருந்தார்.


இந்த நிலையில் இந்த வாரம் விஜே ப்ராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளனர் மேலும் இந்த வாரம் நடைபெற்ற பூகம்பம் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தோற்றதால் பழைய போட்டியாளர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள் வரவுள்ளனர்.


அந்த வகையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் வர்மா என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனா இவருடைய வருகை ஹவுஸ்மேட்ஸிற்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement