• Aug 01 2025

தனக்கென கேரவான் வைத்த யோகி பாபு...!தயாரிப்பாளர்கள் சிக்கலில்...!

Roshika / 23 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு தற்போது தனது சொந்த கேரவான் வாகனத்தை படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தி வருகிறார். நடிகர்களுக்கு தனி வசதிக்காக தயாரிப்பாளர்கள் கேரவான் வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால் யோகி பாபு, தன் சொந்தமாகக் கொண்டிருக்கும் வாகனத்தையே பயன்படுத்த வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளார்.


இந்த கேரவானை தினசரி 40,000 வாடகைக்கு வழங்குகிறார். இதில் டீசல், டிரைவர் சம்பளம், மற்றும் பிற செலவுகள் அடங்கும். இது மட்டுமல்லாமல், இந்த தொகையை யோகி பாபுவின் மனைவியின் வங்கிக் கணக்கில் Google Pay மூலம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், இந்த நிபந்தனையை பின்பற்றாமல் செலுத்தப்படும் தொகை ஏற்கப்படாது என்றும், அந்நாளில் யோகி பாபு ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் சில தயாரிப்பாளர்கள், அவருடைய இந்த புதிய நிபந்தனைகளை சமாளிக்கப் பெரிய சவாலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

Advertisement