• Sep 15 2025

மோகன்லால்-நந்தா கிஷோர் கூட்டணியில் விருஷபா!டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவித்த படக்குழு!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பான் இந்தியா படம் ‘விருஷபா’, அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட படத்தை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார்.


இந்த திரைப்படத்தில் மோகன்லாலுடன் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.வி.எஸ் ஸ்டுடியோ, பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ், பாலாஜி டெலிபிலிம்ஸ், மற்றும் Connect Media ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. பிரபலத் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்தப் படத்தில் மூத்த தயாரிப்பாளராக இருக்கிறார்.

படத்தின் கதைக்களம் காதலும் பழிக்குப் பழி எடுக்கும் தீவிர உணர்வுகளும் மோதும் பின்புலத்தில், அப்பா-மகன் உறவை மையமாகக் கொண்டதாகும். இது ஒரு மாஸ் ஆக்ஷன் எமோஷனல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.


படத்தின் முக்கியமான சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டுள்ளன, இதில் சுமார் 3000 துணை நடிகர்கள் பங்கேற்றனர் என நடிகை நேகா சக்ஸேனா தெரிவித்தார்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளை மோகன்லால் சமீபத்தில் முடித்துள்ளார். இந்நிலையில், 'விருஷபா' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது. இது டிரெய்லர் வெளியீடு ஆக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement